பிஸ்கட் பிரியர்களா நீங்கள்.? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!
பிஸ்கட் பிரியர்களா நீங்கள்.? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோ..!
நம்மில் பெரும்பாலானோர் அனைவரும் பிஸ்கட் சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதில் இன்னும் சிலபேர் பிஸ்கட் இல்லாமல் டீ குடிக்கவே மாட்டார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் உணவு பட்டியலில் கூட இந்த பிஸ்கட் இடம் பெற்றுள்ளது.
இன்று நாம் உண்ணும் பிஸ்கட்டுகளானது பல சுவைகளில் கிடைக்கின்றது. அதிலும் கிரீம் பிஸ்கட்டுகளை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆனால் இந்த பிஸ்கட்டுகளால் ஏற்படும் பாதிப்பை நாம் ஒரு போதும் அறிந்ததில்லை.
பொதுவாக பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் அதிகம் உள்ள சர்க்கரை கலக்கப்படுகிறது. இது உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய், இதய பிரச்சனை, கொழுப்பு சத்து அதிகரிப்பு போன்ற பாதிப்புகளை நம் உடலில் ஏற்படுத்துகிறது. மேலும் சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கிட்டில் அதிக அளவு இருக்கின்றது. இது நம் உடலுக்கு உகந்தவை அல்ல.
மேலும் பிஸ்கட்டுகளை தயார் செய்வதற்கு மைதா மாவு மட்டுமில்லாமல் பாமாயிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.