தீராத வாயு தொல்லையால் அவதிபடுபவரா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்..!
தீராத வாயு தொல்லையால் அவதிபடுபவரா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்..!
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் வாயு தொல்லையால் பல சங்கடங்களுக்கு ஆளாகின்றனர். இந்த வாயு தொல்லையானது நாம் வாழும் வாழ்க்கை முறை மற்றும் நாம் உண்ணும் உணவு முறைகளால் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
இந்த வாயு பிரச்சனையை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு இயற்கை வழியில் எளிமையாக விரட்டி விடலாம். அவையாவன 1) அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 6 மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமம் இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும்.
2) பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு வறுத்து எடுத்த பொருட்களை நன்கு ஆரவைக்கவும். இதனையடுத்து ஆற வைத்துள்ள பொருட்களை ஒரு உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
3) மீண்டும் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் இடித்து வைத்துள்ள ஓமம் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதனை ஒரு டம்ளர் அளவுக்கு வடிகட்டி அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து பருகி வந்தால் வாயு தொல்லையில் இருந்து எளிதில் விடுபடலாம்.