"உங்க முகம் கண்ணாடி போல் மினுமினுக்கணுமா? அதுக்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணனும்!"
உங்க முகம் கண்ணாடி போல் மினுமினுக்கணுமா? அதுக்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணனும்!
பார்த்தவுடனேயே ஒருவரை கவர்வது நமது முகம் தான். முகத்தை அழகாக வைக்க பலரும் கெமிக்கல் அடங்கிய கிரீம் மற்றும் பேசியல் என்று கண்டதையும் முயன்று வருகிறோம். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஏராளம்.
முகத்தில் எண்ணெய் வடிதல், முகப்பரு, கருமை மற்றும் கரும்புள்ளி ஆகியவை முக அழகை கெடுக்கின்றன. இதற்கு பீட்ரூட்டை பயன்படுத்தி எவ்வாறு தீர்வு காண்பது என்று இங்கு பார்ப்போம். முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து இரண்டாக நறுக்கி, அதில் பாதியை மட்டும் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுத்து மிக்சியில் அந்த பீட்ரூட்டை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவேண்டும். இதையடுத்து ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாற்றை வடிகட்டி, அதில் 1 தேக்கரண்டி கடலைமாவு, 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இறுக மூடி வைக்க வேண்டும்.
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் முகத்தை துடைத்துவிட்டு, இந்த பீட்ரூட் பேஸ்டை 1/4 தேக்கரண்டி அளவு எடுத்து முகத்தில் தடவி, இரவு முழுக்க அப்படியே விட்டு, காலையில் எழுந்ததும் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி வரலாம். இதன் மூலம் முகம் அழகாகவும், பொலிவாகவும் மாறும்.