வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா?
மனிதர்கள் உணவில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் முதன்மையானது வெங்காயம். காரத்தன்மை கொண்ட வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து எந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பச்சை வெங்காயம் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
அதேபோல் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் என்ற ஆன்ட்டிஆக்சிடென்ட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
பச்சை வெங்காயத்தில் நார் சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படும் அழற்சியின் அளவை குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தில் சல்பர் கலவை நிறைந்துள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இவை புற்றுநோயை கூட தடுக்க உதவுகின்றன.
அதிலும் குறிப்பாக பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் தோல் சுருக்கங்கள், உடலில் ஏற்படும் புள்ளிகள் மற்றும் நிறமி அளவை குறைக்க பச்சை வெங்காயத்தில் குரோமியம் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.