"பிரியாணி இலைகளை எரிப்பதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?!"
பிரியாணி இலைகளை எரிப்பதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?!
இந்தியாவில் பிரியாணியில் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு இலை வகை தான் பிரியாணி இலை. இந்த இலையை வீட்டில் எரித்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். இவற்றை எரிக்கும்போது அவை நறுமணத்தைப் பரப்புகின்றன.
இந்த மணம் நம் மன அழுத்தத்தைக் குறைக்கும். மனப் பதற்றத்தைப் போக்கி, ஒரு அமைதியான நிலையைக் கொடுக்கிறது. மேலும் இவற்றை எரிப்பதால் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. சளி, இருமல், தும்மல் ஆகியவற்றுக்கு சிறந்த தீர்வாகும்.
மேலும் இதை எரிப்பதால் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனதைத் தெளிவாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் இவை நம் சுற்றத்தை பூச்சிகளில் இருந்தும் காக்கும். மேலும் இந்த பிரியாணி இலையை எரிப்பது ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
நம்மை சுற்றியிருக்கும் துர்நாற்றத்தைப் போக்கி, நறுமணத்தைப் பரப்புகிறது. மேலும் இதை எரிக்கும் போது ஒரு காற்றோட்டமான இடத்தில், சுற்றிலும் எந்த தீப்பிடிக்கும் பொருட்களையும் இல்லாதவாறு பார்த்து கவனமாக எரிக்க வேண்டும். சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இதை சுவாசிக்க வேண்டும்.