"வாழைக்காயில் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?!"
வாழைக்காயில் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?!
நம் முன்னோர்கள் உணவே மருந்து என்னும் இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நம் உடலுக்கு நன்மை பயக்கும் அத்தனையையும் உணவாக உட்கொண்டு வந்தனர். அந்தவகையில் வாழைக்காயை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
பொதுவாக வாழைக்காய் என்றாலே வாய்வு என்று கூறுவர். ஆனால் இந்த வாழைக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயில் சீரகமும், மிளகும் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் ரத்த விருத்திக்கு வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி சமைத்தால், அதிலுள்ள நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும். வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி வதக்கி, அதனுடன் உளுந்து, சீரகம், மிளகாய், பூண்டு, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம்.
இதனால் ரத்தம் சுத்தமாகும். வயிற்று இரைச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும். அதோடு வாழைப்பிஞ்சினை நெய்யில் வதக்கி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். வாழைக்காயை நன்கு உலர்த்திப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர அஜீரணப் பிரச்சனைகள் தீரும்.