இதை தெரிஞ்சுக்கோங்க.! தயிரில் வெள்ளரிக்காய் விதை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.!?
இதை தெரிஞ்சுக்கோங்க.! தயிரில் வெள்ளரிக்காய் விதை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.!?
கோடைகால நோய்கள்
பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். நம் உடம்புக்கு சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நன்மையை தரும். நம் உடல் அதிக வெப்பநிலையை அடையும் போது பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகுகிறோம். நோய் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் மருந்து, மாத்திரைகளை சாப்பிடாமல் நோய் பாதிக்கும் முன்பே சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
இதன்படி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தயிரில், வெள்ளரிக்காய் விதைகளை கலந்து சாப்பிட்டால் பலவிதமான நன்மைகளை தருகிறது என்று சித்த வைத்திய மருத்துவர்கள் அறிவுறுத்து வருகின்றனர். இது வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களான சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடல் வெப்பநிலை அதிகரிப்பது, வியர்க்குரு, வேர்வை நாற்றம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
தயிரில் ஊறவைத்த வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் தயிரில் வெள்ளரிக்காயை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் வெளியேறிவிடும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மேலும் நம் தோல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருப்பதற்கு தயிர் மற்றும் வெள்ளரிக்காய் விதைகள் பெரிதும் உதவி புரிகிறது. வெயிலின் தாக்கத்தினால் நம் தோலின் நிறம் மாறுவதை தடுக்கவும் இது உதவுகிறது.
குறிப்பாக உடலில் ஆன்டிஆக்சிடென்களை அதிகப்படுத்தி வெயிலினால் ஏற்படும் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. உடலில் நீர் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தயிரில் வெள்ளரிக்காய் விதைகளை ஊற வைத்து சாப்பிட்டு வருவது பலவிதமான நன்மைகளை அளிக்கிறது என்பதால் பல சித்த மருத்துவர்கள் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.