அருமையான டிப்ஸ்: தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா... இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
அருமையான டிப்ஸ்: தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா... இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
கொய்யாபழத்தில் கார்போஹட்ரேட், விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து,ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் புரோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. இப்படியான அதிகப்படியான சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிடும் போது பலவிதமான நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது.
1. கொய்யாப்பழத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் உடல் சோர்வு, பித்தம் நீங்கி இரத்தம் சுத்தமாக்கப்படும்.
2. கொய்யாப்பழம் சிறந்த மலம் நீங்கியாகும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
3. சர்க்கரை நோயாளர்கள் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் காரணம் இவர்களின் இரத்ததில் இருக்கும் சக்கரையின் அளவை அதிகரித்து விடும். ஆனால் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம் ஏனெனின் இந்த பழத்தில் நார்ச்சத்து இருப்பதாலும் மற்றும் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதாலும் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.
4. கொய்யாப்பழத்தில் அதிகமான மெக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் நரம்புகளுக்கும், தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றல் அதிமாக காணப்படுகிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதும் மூளையின் செயல்பாடு அதிகரித்து புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.