அடேங்கப்பா..! கசக்குது என பாகற்காயை ஒதுக்கி வைக்கிறீங்களா?.. அதில் உள்ள அசத்தல் நன்மைகள் இதோ.!
அடேங்கப்பா.. கசக்குது என பாகற்காயை ஒதுக்கி வைக்கிறீங்களா?.. அதில் உள்ள அசத்தல் நன்மைகள் இதோ.!
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் கவனிக்க வேண்டியது கசப்பு தன்மை கொண்ட பாகற்காய். இதனை கசப்பு சுவை கொண்டது என்று ஒதுக்காமல், அதனை முறையாக சமைத்து கசப்பு சுவை தெரியாமலும் சாப்பிடலாம். அதில் உள்ள சத்துக்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
பாகற்காய் ஆசிய நாட்டினை தாயகமாக கொண்டது ஆகும். இவை ஆண்டு முழுவதும் நமது இந்திய சந்தைகளில் பிரதானமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். 100 கிராம் அளவு கொண்ட பாகற்காயில் 17 கலோரி ஆற்றல் இருக்கின்றன.
இதில் இருக்கும் பாலிபெப்டைடு பி சத்துப்பொருள், மருத்துவ உலகில் தாவரத்தின் இன்சுலின் என்று கருதப்படுகிறது. இவை தாவரங்களில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்ட வைட்டமின் சி பாகற்காயில் நிறைந்து காணப்படுகிறது.
இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள பாகற்காய் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விரட்டி அடிக்கும். வைட்டமின் ஏ புற்றுநோய் செல்களை அழிக்கும். வயது மூப்பு வியாதியில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். செரிமான சக்தியை அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.
வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாக்னீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் பாகற்காயில் நிறைந்து கிடைக்கின்றன. பாகற்காய் விதையில் எளிதில் செரிமானம் அடையும் நீர்சத்து, தாதுப்பொருள், உப்பு, வைட்டமின் நிறைந்துள்ளன.