ரத்தத்தை தூய்மைப்படுத்த வேண்டுமா? இந்த பழத்தை ட்ரை பண்ணி பாருங்க.!
ரத்தத்தை தூய்மைப்படுத்த வேண்டுமா? இந்த பழத்தை ட்ரை பண்ணி பாருங்க.!
பேரிக்காய் ஒரு பருவகால பழமாகும். சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இந்த பழங்கள் கிடைக்கும். ஆனால் இந்த பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. அதன்படி பேரிக்காயில் பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆப்பிள் பழத்தின் வகைகளில் ஒன்றாக கருதப்படும் பேரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகளை கொடுக்கிறது. எனவே பேரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
குறிப்பாக பேரிக்கையை ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக, அப்படியே கடித்து மென்று சாப்பிடுவதன் மூலம் அதிக சத்துக்கள் கிடைக்கிறது.
பேரிக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்றி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது.
பேரிக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அதன்படி பேரிக்காயில் 84 சதவீதம் நீர் உள்ளது. எனவே நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலை நீரோட்டமாக வைத்திருக்கவும், உடல் எடை குறைப்பதற்கும் உதவுகிறது.