சர்க்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா.? சாப்பிட்டால் என்ன நடக்கும்.?!
சர்க்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா.? சாப்பிட்டால் என்ன நடக்கும்.?!
சர்க்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் நிச்சயமாக முட்டையை எடுத்துக் கொள்ளலாம். அது அவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். ஆனால், அதிலுள்ள மஞ்சள் கருவை மட்டும் தவிர்ப்பது நல்லது.
ரத்த சர்க்கரையை அதிகப்படுத்த கூடிய முக்கியமான ஒரு விஷயம் கார்போஹைட்ரேட். இது மற்ற உணவுகளை ஒப்பிடும்போது முட்டையில் மிக மிக குறைந்த (0.5 கிராம்) அளவில்தான் இருக்கிறது. இதில் அதிகப்படியான புரதம் இருப்பதால், செரிமானம் தாமதமாகும்.
இதையும் படிங்க: கொசுவர்த்திகளால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து; பகீர் எச்சரிக்கை.!
எனவே, உடலில் ரத்த சர்க்கரை அளவு சாப்பிட்டவுடன் வேகமாக அதிகரிப்பதை இது தடுக்கும். முட்டையில் வைட்டமின்கள் டி, ஏ, கே, இ மற்றும் பி 12 உள்ளிட்டவை இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் நரம்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொட்டாசியம், தோலுக்கு அவசியமான பயோடின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத கோளின் உள்ளிட்டவை அதிக அளவில் இருக்கின்றது.
எனவே முட்டையை சாப்பிடுவது நமக்கு அதிக அளவில் நன்மைகளை கொடுக்கும். சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு மூட்டைகளை சாப்பிடலாம். மஞ்சள் கருவை நீக்கிவிட்டு சாப்பிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முட்டைகளை கூட தாராளமாக சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
இதையும் படிங்க: பித்தவெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!