×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏசியையும், ஃபேனையும் ஒன்றாக உபயோகித்தால் இதெல்லாம் நடக்குமா.?! அடடே.! இது தெரியாம போச்சே.?!

அடடே! இது தெரியாம போச்சே.!ஏசி மற்றும் சீலிங் ஃபேனை ஒன்றாக உபயோகித்தால் இதெல்லாம் நடக்குமா.?!

Advertisement

அடிக்கிற வெயிலுக்கு ஏசி வாங்கி வைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். அதனால் கடன் வாங்கியாச்சும் ஏசி  வாங்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. AC இருக்கும் வீட்டில் கோடைக்காலம்  சொர்க்க காலம் போல அமைகிறது. ஆனால் சீலிங் ஃபேன் மற்றும் ஏசி இவை இரண்டையும் ஒன்றாக உபயோகிக்கும் போது பல மாற்றங்கள் அந்த அறைக்குள் நிகழ்கிறது. 

சீலிங் ஃபேன் மற்றும் ஏசி இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஓடும் போது அந்த அறைக்குள் இருக்கும் மூளை முடுக்கிற்கு எல்லாம் குளிர் காற்று வீசி அறையே சொர்க்கமாக உணர வைக்கும். ஏசியையும் சீலிங் ஃபேனையும் ஒன்றாக பயன்படுத்தும் போது என்ன நிகழும்  என்ற குழப்பம் உள்ளவரா நீங்கள் இதோ உங்களுக்கான பதிவு தான் இது. 

இந்த இரண்டு மின்சாதன பொருட்களையும் ஒன்றாக பயன்படுத்தும் போது பெரிதாக ஒன்றும் தவறு இல்லை இதில் சில நன்மைகளும் உண்டு. ஏசி மற்றும் சீலிங் ஃபேன் இவை இரண்டையும் இரவு நேரங்களில் ஒன்றாக உபயோகிக்கும் போது மேலும் குளிர்ந்த காற்றை நமக்குத் தருகிறது. 

ஏசி ஓடிக் கொண்டிருக்கும்போது சீலிங் பேனை உபயோகித்தால் அறையில் உள்ள வெப்ப காற்றை வெளியேற்ற பயன்படுகிறது. சீலிங் ஃபேன் ஏசி இருக்கும் அறையில் ஓடினால்  தூசி, குப்பை அண்டவிடாமல் பறக்கச் செய்கிறது. மேலும் AC யை 24 அல்லது 26 இல் கூட வைத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் மின்சாரக் கட்டணம் அதிகம் தேவைப்படுவதில்லை. எனவே குழப்பம் இல்லாமல் ஏசி மற்றும் சீலிங் ஃபேன் உபயோகித்துப் பயன் பெறுங்கள். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ac #Ceiling fan #Use of benefits #Room Temperature #Room of wind
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story