×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி தகவல்.! வீக்கத்துக்கும், காயங்களுக்கும் ஒட்டபடும் பேண்டேஜ் மூலம் புற்றுநோய் வருமா.!?

அதிர்ச்சி தகவல்.! வீக்கத்துக்கும், காயங்களுக்கும் ஒட்டபடும் பேண்டேஜ் மூலம் புற்றுநோய் வருமா.!?

Advertisement

நம் உடலில் எந்த இடத்தில் காயம் பட்டாலும் முதலில் நினைவிற்கு வருவது பேண்டேஜ் தான். இதை வீக்கம், சிராய்ப்பு ஏற்பட்ட இடத்திலும் பேண்டேஜ் ஒட்டலாம். ஆனால் இப்படி பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமையும் என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் நுகர்வோர் பாதுகாப்பையும் கண்காணிக்கும் அமைப்பான மேமொவேஷம் மற்றும் என்விரான்மென்டல் ஹெல்த் நியூஸ் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் சில வேதிப்பொருகள் பேண்டேஜில் இருப்பதைக் கண்டறிந்தனர். 

வீக்கம் மற்றும் காயங்களுக்குப் பயன்படுத்தும் பேண்டேஜ் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சியான தகவல் என்றே கூறலாம். இந்த பேண்டேஜ்களில் PFAS எனப்படும் பாலி ஃப்ளுரோ அல்கலின் மற்றும் டெட்ரோ ஃப்ளுரோ எத்திலீன் என்கிற வேதிப்பொருள் உள்ளன. 

இதில் சுமார் 45- க்கும் மேற்பட்ட பிரபல பேண்டேஜ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் 27 பிராண்டுகளில் இந்த வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டன. ஆய்வின் இணை ஆசிரியரும், அமெரிக்காவைச் சேர்ந்த நச்சுயியல் நிபுணரும் மற்றும் அந்நாட்டின் தேசிய சுற்றுச்சூழல் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான மருத்துவர் லிண்டா எஸ் பிர்ன்பாம் பேண்டேஜ்களில் எண்ணெய்ப்பசை மற்றும் கறைகள் ஒட்டிக் கொள்ளும்  என்பதால் நான்ஸ்டிக் சேர்க்கப்பட்டு வருகிறது. 

இந்த வேதிப்பொருள்கள் கலந்த பேண்டேஜ்யை காயங்களில் ஒட்டப்படும்பொது இரத்தத்தின் வழியாக திசுக்களில் ஒட்டி வளர்ச்சி அடைய நேரிடும். இதன் மூலம் 50% ஆபத்தை தரக்கூடிய வளர்ச்சி ஹார்மோன்கள் பாதிப்பு, இனப்பெருக்க பிரச்சனை, தைராய்டு, நாளமில்லா சுரப்பியில் சீர்குலைவு போன்ற பல பிரச்சனைகளை விளைவிக்கக்கூடும். மேலும் இதனால் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bandage #cancer #Affect of human #solution #health tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story