புற்றுநோய், கிட்னியில் கற்கள் வராமல் தடுக்கும் கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ்..! வீட்டிலேயே செய்வது எப்படி?..!
புற்றுநோய், கிட்னியில் கற்கள் வராமல் தடுக்கும் கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ்..! வீட்டிலேயே செய்வது எப்படி?..!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ் எவ்வாறு சமைப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
கேரட் சாப்பிடுவதன் மூலமாக புற்றுநோய் வராமல் தடுக்க இயலும். பீட்ரூட் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்க இயலும்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 2
பெரிய வெங்காயம் - 1
பீட்ரூட் - 1
உதிரியாக வடித்த சாதம் - 1½ கப் மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் -1 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கேரட்டை துருவி தனியாக எடுத்துக்கொள்ளவும். பீட்ரூட்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், பச்சை மிளகாய், உப்பு, கேரட், பீட்ரூட், மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
★இறுதியாக அடுப்பை மிதமான தீயில் வைத்து காய்கறிகளை மூடிபோட்டு வேக வைக்க வேண்டும். அதனுடன் நன்றாக வெந்த, உதிரியாக வடித்த சாதத்தை எடுத்து கலந்து கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறினால் கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ் தயாராகிவிடும்.