×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் இருக்கா.?! அப்போ இந்த எண்ணெய் குடித்தால் போதும்.!

செரிமானம், மலச்சிக்கல் இருக்கா.? அப்போ இந்த எண்ணெய் குடித்தால் போதும்.!

Advertisement

விளக்கெண்ணெய் என்று சொல்லக் கூடிய ஆமணக்கு எண்ணெய் உடலுக்குப் பலவிதமான நன்மைகள் தரக்கூடிய வகையில் அமைகிறது. ஆமணக்குச் செடியில் உள்ள விதைகளின் மூலம் இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும். மேலும், தலைமுடி உதிர்வைத் தடுக்கும். எண்ணெய் வகைகளில் விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாகவும், நறுமணமற்றதாகவும் இருக்கும். இந்த எண்ணையை எந்த அளவில் குடித்தால் நன்மை தரும் என்பது பற்றி பார்ப்போம். 

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தலைமுடிக்கு விளக்கெண்ணையை தேய்த்து குளித்து வருவார்கள். அதனால் தான் அவர்கள் தலைமுடி இளநரை அற்று நீண்ட நாள் இருந்திருக்கிறது. இதேபோல் பிறந்த குழந்தைகளுக்கும் விளக்கெண்ணெய் கொடுத்து வயிற்றில் இருக்கும் கட்டுக்கடை அல்லது அசுத்தங்களை வெளியேற்றுவார்கள். மேலும் குழந்தைகளுக்கு கண்கள், தலை, கை, கால்கள் என உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து பின் குளிக்க வைப்பார்கள். இதனால் அவர்கள் கை, கால்கள் வலுவாக இருக்கும்.

எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் தொப்பை இருக்கே என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த விளக்கெண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும். அந்த காலத்தில் குடலை சுத்தம் செய்ய இந்த எண்ணையை குடித்து வருவார்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் ரிசினோலிக் அமிலம் இருப்பதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது. 

இந்த எண்ணெய் கிளியோபாட்ராவின் அழகான தோல் மற்றும் கண்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த எண்ணெயில் மூலம் விளக்கயும் வருவார்கள். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் இந்த எண்ணெயை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி இந்த எண்ணையை குடிக்க கூடாது. அப்படி குடித்தால் வயிற்றுப்போக்கு, நீரிழப்பு ஏற்பட்டு பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆனால் இந்த எண்ணெய் சருமத்திற்கு அழகை தரும் என்பதால் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்துகின்றனர். எனவே விளக்கெண்ணெய் மலச்சிக்கலுக்கு நல்லது என்று குடித்தாலும் அடிக்கடி இதை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது கிடையாது எனவே அளவாக எடுத்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Castor oil #constipation #digestion #hair fall #benefits
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story