குழந்தைகளின் ஃபேவரட்.. வெயிலுக்கு குளுகுளு மாம்பழ மில்க்க்ஷேக்.. இன்றே செய்து அசத்துங்கள்.!
குழந்தைகளின் ஃபேவரட்..வெயிலுக்கு குளுகுளு மாம்பழ மில்க்க்ஷேக்.. இன்றே செய்து அசத்துங்கள்.!
மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ மில்க்க்ஷேக் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 3 தேக்கரண்டி
மாம்பழம் - 2
குளிர்ந்த பால் - 2 கப்
செய்முறை :
★முதலில் மாம்பழத்தின் தோலை முழுவதுமாக நீக்கிவிட்டு, பின் அதனை துண்டுதுண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★அடுத்து நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
★இறுதியாக அதில் வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பரிமாறினால் சுவையான மாம்பழ மில்க்க்ஷேக் தயாராகிவிடும்.
★அத்துடன் இதில் சில ஐஸ்கியூப்களை போட்டு குடிப்பதன் மூலமாக மிகவும் ருசியாகவும், வெயிலுக்கு இதமாகவும் இருக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும்.