காமவெறியர்கள் மூவருக்கு பலியான சிறுமி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
child rabe - mahila court judgemend
தேனி அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள காமாட்சி புரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 10 வயது சிறுமி திடீர் என மாயமானார். இதையடுத்து பெற்றோர்கள் சிறுமி கிடைக்காததால் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடினர்.
அப்போது அங்குள்ள கிணற்றில் சிறுமியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மூவரும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.