குழந்தைக்கு அதிகமா நொறுக்கு தீனி கொடுக்குறீங்களா?.. ஆசையாக சாப்பிட்டு புற்றுநோயை வாங்கும் குழந்தைகள்.!!
குழந்தைக்கு அதிகமா நொறுக்கு தீனி கொடுக்குறீங்களா?.. ஆசையாக சாப்பிட்டு புற்றுநோயை வாங்கும் குழந்தைகள்.!!
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் கேட்கும் முதல் விஷயமாக நொறுக்கு தீனிகளும், செல்போனுமே இருக்கின்றது. இவை இரண்டுமே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். நொறுக்கு தீனிகள் சுவையாக இருந்தாலும் அதிகளவு கொழுப்பு சர்க்கரை மற்றும் உப்பு இருப்பதால் உடல் நலத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதய நோய்க்கு வாய்ப்பு
நொறுக்கு தீனிகளில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதன் காரணமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் நொறுக்கு தீனிகளில் அதிகளவு உப்பு இருப்பதால் பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பிற நோய்களுக்கு வழி வகுக்கிறது.
இதையும் படிங்க: தலைக்கு எண்ணெய் வைக்க போறிங்களா.? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!
புற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கை
குழந்தை பருவத்திலேயே நொறுக்கு தீனி பொருட்கள் அதிகமாக உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், நொறுக்கு தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்றும் கூற முடியாது.
புற்றுநோய்க்கு இதுவும் ஒரு காரணம்
பல முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. அதிகளவில் இரசாயனம் கலக்கப்பட்ட பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி, செயற்கை வண்ணங்களை கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவைகளை தொடர்ச்சியாக உண்ணும் குழந்தைகள் ஆரோக்கியமின்றி புற்றுநோய் நோயாளிகளாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.
பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை
தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் பிஸ்கட், கேக், போன்ற ரசாயனம் சேர்க்கப்பட்டவற்றை பெற்றோர் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களின் உண்ணும் பழக்கம்தான் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் ஆரோக்கியமாக தயாரிக்கும் உணவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: கீவி பழத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!