"உங்கள் குழந்தை ரொம்ப அடம் பிடிக்குதா?" அப்போ இதை முயற்சி பண்ணுங்க!
உங்கள் குழந்தை ரொம்ப அடம் பிடிக்குதா? அப்போ இதை முயற்சி பண்ணுங்க!
சிறு குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் 2 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் எது செய்தாலும் அது ரசிக்கும்படி இருக்கும். ஆனால் அதற்கு மேல் வளர்ந்த குழந்தைகள் எது செய்தாலும் அது பெரியவர்களுக்கு எரிச்சலை தான் கொடுக்கும்.
மேலும் சில குழந்தைகள் சிறு வயது முதலே மிகவும் பிடிவாதமாக இருக்கும். அதிலும் ஒற்றைக் குழந்தையாய் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் யாருடைய பேச்சும் கேட்காதவாறு, மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இதை இப்படியே விடுவது மிகப்பெரிய சிக்கலில் தள்ளிவிடும்.
ஏனெனில் அக்குழந்தைகள் வளர மேலும் மூர்க்கமாகத் தான் நடந்து கொள்வார்கள். எனவே குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால், கண்டிப்பாக பெற்றோர் அதை தவிர்க்க வேண்டும். இதனால் கோபம் கொண்டு அடித்தாலும் கூட குழந்தைகள் அசைய மாட்டார்கள்.
எனவே சரி, தவறு பற்றி எடுத்து சொல்ல வேண்டும். சில நேரங்களில் தெரியாமல் செய்துவிட்ட தவறுகளை எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும். அவர்கள் செய்வதில் உள்ள தவறுகளை மெதுவாக அவர்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் உங்கள் முடிவுக்காக காத்திருப்பார்கள்.