மனிதநேயம் செத்துவிட்டதா! குழந்தையுடன் ரயிலில் ஏறிய பெண்ணிற்கு நடந்த கெடுமை
co passengers didnt give space for girl with baby
மும்பையில் தன்னுடைய 11 மாத கைக்குழந்தையுடன் ரயிலில பயணம் செய்த பெண்ணிற்கு சக பயணிகள் இடம் தர மறுத்ததால் அவர் கதவின் அருகே தரையில் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
மும்பை சூரத் நகர விரைவு ரயிலில் பெண்மனி ஒருவர் தன்னுடைய 11 மாத கைக்கழந்தையுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். கூட்ட நெரிசல் இல்லாத அந்த ரயிலில் அனைத்து பயணிகளும் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் அளவிற்கு போதிய இருக்கைகள் இருந்துள்ளன.
ஆனால் அந்த பெண்ணிற்கு முன்பே ரயிலில் ஏறிய பல பெண்கள் 3 பேர் அமர்ந்து வரும் இருக்கையில் படுத்துகொண்டனர். குழந்தையுடன் வந்த பெண்மனிக்கு இடம் தர எவருக்கும் மனம் வரவில்லை. கடைசியில் வேறு வழியின்றி அந்தப் பெண் குழந்தையுடன் ரயில் பெட்டியின் கதவருகே தரையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இதனை அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார். பலர் இருக்கையில் படுத்திருப்பதும், சில பெண்கள் தரையில் அமர்ந்து பயணம் செய்யும் காட்சியும் மிகவும் பரிதாயமாக உள்ளது. பெண்களே மற்ற பெண்களுக்கு உதவ மனமில்லாத சமுதாயத்தில் வாழ்கின்றோமா என்று எண்ணும் போது மிகவும் கேவலமாக உள்ளது.