"உடலுக்கு ஆரோக்கியமானது காபியா? டீயா? எது சிறந்தது?"
உடலுக்கு ஆரோக்கியமானது காபியா? டீயா? எது சிறந்தது?
அதிகளவில் பிரபலமான இரண்டு பானங்கள் காபி மற்றும் டீ தான். ஒரு சிலருக்கு காபி தான் பிடிக்கும். மற்றும் சிலருக்கு காபி பிடிக்காது. டீ தான் பிடிக்கும். இந்த இரண்டு பானங்களில் எது சிறந்தது? இதில் எது ஆரோக்கியமானது என்று இங்கு பார்ப்போம்.
காபியில் நரம்பு மண்டலத்தை தூண்டும் காபின் அதிகளவில் உள்ளது. மிதமான அளவில் காபின் உட்கொள்வது உயிர்ச்சக்தியை அதிகப்படுத்தும். மேலும் காபியில் அதிகளவு ஆக்சிஜனேற்றங்களும் உள்ளன. மேலும் காபி இதயநோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
ஆனால் அதிகப்படியான காபின் உட்கொள்ளுதல் தூக்கமின்மை, மன அமைதியின்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். தேநீரில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. தேநீரில் காபியை விட குறைந்த அளவு காபின் உள்ளது.
மேலும் தேநீர் மனப்பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இதயநோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. காபி, டீ இரண்டிலும் சம அளவில் நன்மைகள் இருந்தாலும் இரண்டையுமே அளவோடு உட்கொள்வதே சிறந்தது.