வாரத்தில் 3 நாள் கொத்தமல்லி இலையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?!
கொத்தமல்லி இலை உடலுக்கு புத்துணர்ச்சி தருமா.?! வாருங்கள் பார்க்கலாம்.!
கொத்தமல்லி இலையை வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நோய்களிலிருந்து காப்பாற்றி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. இது பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும் ஒரு மருந்தாகும். இந்த இலை தைராய்டு உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் தைராய்டு பிரச்சனையே அவர்கள் வாழ்க்கையில் வராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை வகை என்றால் அது கொத்தமல்லி இலை தான்.
கொத்தமல்லி இலையை துவையலாக அரைத்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு வகையான நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த இலை நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், செரிமானக் கோளாறு, கண்பார்வை மங்குதல் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
கொத்தமல்லி இலையை மூலிகை பொருள் என்றும் கூறலாம். இது பித்தம், வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளவர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. இதன் விதையை தனியா என்று கூறுவார்கள். கல்லீரலைப் பலப்படுத்த உதவுகிறது. இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.