ஹலோ.. கொரோனா வைரஸ் மேலும் 7 அறிகுறிகள் கண்டுபிடிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்கூட கொரோனாவா இருக்கலாமாம்..
கொரோனாவுக்கான மேலும் 7 அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கான மேலும் 7 அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றுவரை ஒரு முடிவே இல்லாமல் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் பிரிட்டன் மற்றும் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா பரவி வருவது மனிதர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம், அதன் அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நாடுகளும் மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிவருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக காய்ச்சல், வறட்டு இருமல், சுவை திறன் இழப்பு உள்ளிட்டவைகள் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 7 புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
தசை வலி, மூட்டு வலி, வயிற்றுப் போக்கு, சருமப் பிரச்னை, கை விரல்களின் நிற மாற்றம், கால் விரல்களின் நிற மாற்றம், வெண்படலம் ஆகிய 7-ம் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.