பெண்கள் வாட்சப் குரூபில் அரை நிர்வாண புகைப்படம்! சர்ச்சையில் சிக்கிய கவுன்சிலர்
councillor sending half nude photos to women whatsapp group
இங்கிலாந்தில் கவுன்சிலர் ஒருவர் பெண்கள் அதிகமாக இருக்கும் வாட்சப் குரூப் ஒன்றில் மேலாடை இன்றி இருக்கும் ஒரு பெண்ணின் அரைநிர்வாண புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இதனால் அவர் பதவி விலக வேண்டுமென எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இங்கிலாந்தில் கவுன்சிலராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த முகமது மஃரூப் என்பவர் இருந்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பெண்கள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக அந்த பெண்கள் உருவாக்கிய "மாம்ஸ் யுனைடெட்" என்ற வாட்சப் குரூப்பில் அவரையும் சேர்த்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே முகமது தனது மொபைலில் இருந்து ஒரு பெண்ணின் அரை நிர்வாண புகைப்படத்தை அந்தப் பெண்கள் இருக்கும் வாட்சப் குரூப்பிற்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்த அந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த குழுவில் தலைவர் சாஹிரா இர்ஷாத் என்ற பெண் கவுன்சிலர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், கவுன்சிலர் ஆபாசப் புகைப்படத்தினை பெண்களுக்கு பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை பெரிய சர்ச்சையாக மாற்றிய எதிர்க்கட்சியினர் கவுன்சிலர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்த கவுன்சிலர், தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும் இதனால் மிகுந்த மனசங்கடத்திற்கு ஆளாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தவறு எப்படி நடந்தது என்று விளக்கம் அளித்துள்ள அவர், "இந்த நிகழ்ச்சியில் இர்ஷாத் பேசிய வீடியோவை அனுப்புவதாக நினைத்து தவறுதலாக அந்த புகைப்படத்தை அனுப்பி விட்டேன். என்னுடைய இந்த மொபைல் போனில் பலர் வாட்சப் குரூப்புகள் உள்ளன. அதில் யாரோ எனக்கு இந்த ஆபாச புகைப்படத்தினை அனுப்பியுள்ளனர். அதை நான் கவனிக்கவில்லை. தானாகவே எனது மொபைலில் பதிவாகிவிட்டது.
நான் நிகழ்ச்சியில் எடுத்த வீடியோவை தேர்வு செய்வதற்கு பதிலாக தவறுதலாக அந்த புகைப்படத்தை தேர்வு செய்து விட்டேன். அதனை அனுப்பிய பிறகு தான் எனக்கு தெரியவந்தது. எனவே உடனே அதனை அழித்து விடுங்கள் என்றும் செய்தி அனுப்பினேன். நான் அனுப்பிய புகைப்படம் அந்த குரூப்பில் சில வினாடிகள் மட்டுமே இருந்தன. இதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.