×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒத்த கறிவேப்பிலையில், இத்தனை நன்மைகளா.?!

செம.! பொருள் ஒன்று.! பயன்கள் மூன்றா.!? கறிவேப்பிலை ஜுஸ் ஒண்ணு போதுமே.!

Advertisement

கறிவேப்பிலையின் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் எடை மற்றும் சர்க்கரை அளவை குறைப்பதற்கும், தலைமுடி வேகமாக வளர்வதற்கும் கருவேப்பிலையை எப்படி பயன்படுத்தினால் பயன்தரும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

கறிவேப்பிலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் உடலுக்கு பல்வேறு வகையிலும் நன்மை தரக்கூடிய ஒரு பொருளாக கருவேப்பிலை உள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பைபர், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு கோ இன்ச்சத்து, மெக்னீசியம், தாமிரம், அமினோ அமிலம், க்ளைகோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் கார்போஹைட்ரேட்டர்கள் போன்றவை கருவேப்பிலை உள்ள ஊட்டச்சத்துக்களாகும். 

இயற்கையாகவே தலைமுடி பிரச்சனைகளுக்கு கருவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது சக்கரை நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கருவேப்பிலை எடுத்துக் கொண்டால் நல்ல பயன் தருகிறது. இந்த இலை கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.

இருதய நோய் உள்ளவர்கள் கட்டாயமாக இந்த இலையை சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கறிவேப்பிலையை  தேவையான அளவு எடுத்து முதலில் காய வைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்த பொடியுடன் சிறிதளவு மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு சாதத்தில் இந்த பொடியை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அவ்வளவு நன்மையைத் தருகிறது. 

கர்ப்பிணிகளுக்கு கருவேப்பிலை ஒரு வரப்பிரசாதமாகும். கருவேப்பிலையை முதல் நாள் இரவு ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில எடுத்து, இதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி குடித்து வந்தால் தலைமுடி காடு போல கருகருவென வளரும். இளநரையும் நெருங்காது. கருவேப்பிலையை வெறும் வயிற்றில் 15-20 சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். அஜீரண கோளாறுகள் நீங்கி, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 

மேலும் கருவேப்பிலையை ஜூஸ் செய்து குடித்தால் இரு மடங்கு நன்மைகளைத் தருகிறது. இந்த இலையுடன் புதினா அல்லது கொத்தமல்லி தழைகளை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து, வடிக்கட்டாமல் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் இந்த ஜூஸிலே கிடைத்துவிடும். இதேபோல் கருவேப்பிலையுடன் இஞ்சி சிறிதளவு, நெல்லிக்காய் 2, மஞ்சள் துண்டு 1 சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து பிடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Curry leaves #Juice #benefits #weight loss #hair fall
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story