தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?..!
தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?..!
இன்றளவில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முக்கியமானது. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியம் என்றுமே இருக்காது. ஆப்பிளில் பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கரையக்கூடிய நார்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும். மூளை செல்களை அழியாமல் பாதுகாக்கும். நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடென்ட் இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்.
சருமத்தை இளமையாக வைக்க உதவி செய்யும். பற்களை பளிச்சென மின்ன வைக்கும். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க உதவும். செரிமானத்திற்கு உதவி செய்யும். குடலியக்கம் நன்கு நடைபெற்று மலச்சிக்கல் தடுக்கப்படும்.
அதேபோல, மார்பகம் மற்றும் குடல் சார்ந்த புற்றுநோய்களை தடுப்பதில் ஆப்பிளுக்கு முக்கிய பங்கு உண்டு.