தினமும் அரைகுறையாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
தினமும் அரைகுறையாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
ஒவ்வொருவரும் பொதுவாக நாளொன்றுக்கு மூன்று முறை சாப்பிடுவோம். சில காரணத்தால் உணவை தவிர்க்க வேண்டிய சூழலில் இன்றளவில் இருக்கும் பல இளம்தலைமுறை இருக்கிறது. வெகுசிலர் மூன்று வேலை உணவுகளையும் சாப்பிடுவது இல்லை.
இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஊட்டச்சத்து, உணவு அவசியம். உணவில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கிறது. உணவை சரிவர எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், பல நோய்களும் ஏற்படும்.
ஒருவேளை உணவை சாப்பிடாமல் இருந்தால், நமது மூளை என்பது நமது பேச்சை கேட்காது. எதற்கெடுத்தாலும் கோபம், வெறுப்பு என்பது இருக்கும். உடலின் ஆற்றலும் இழக்கப்பட்டு, அதன், தொடர்ச்சியாக கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும்.
உணவை சாப்பிடாமல், குறைந்தளவு எடுத்துக்கொள்வதால் கார்டிசோல் ஹார்மோன் அதிகளவு சுரந்து, உடல் எடையை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க வழிவகை செய்யும். தினம் ஒருவேளை உணவை தவிர்த்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். தொடர்ந்து உணவை தவிர்ப்பது மெட்டபாலிசத்தை அளவை பாதித்து, உடல் எடையை விரைந்து குறையும்.