ருசியான நாட்டுக்கோழி ரசம்.! சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. எப்படி செய்வது.?!
ருசியான நாட்டுக்கோழி ரசம்.! சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. எப்படி செய்வது.?!

நாட்டுக்கோழி இறைச்சி கொண்டு நாட்டுக்கோழி கிரேவி, நாட்டுக்கோழி குழம்பு, நாட்டுக்கோழி வறுவல் என பல வகைகள் செய்யலாம். ஆனால், இடித்த நாட்டுக்கோழி ரசம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும். அதுமட்டுமல்லாமல், சளி, இருமல் மற்றும் உடல் வலி ஆகியவற்றால் சிரமப்படுபவர்களுக்கு இடித்த நாட்டுக்கோழி ரசம் ஒரு சிறந்த நிவாரணி ஆகும்.
இந்த இடித்த நாட்டுக்கோழி ரசம் எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையானப் பொருட்கள் :
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 7
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்த மல்லி இலை - சிறிது
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
நாட்டுக்கோழி கால் - 100 கிராம்
தக்காளி - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
முதலில் அம்மிக் கல்லில் நாட்டுக்கோழி கால்களை இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு, அதே அம்மிக் கல்லில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, சோம்பு மற்றும் தக்காளி ஆகியவற்றை இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: இட்லி சாப்பிட்டால் கூட கேன்சர் வருதா.? என்ன கொடுமை சரவணன் இது.?!
இப்போது, அடுப்பைப் பற்ற வைத்து அதில் குக்கரை வைக்கவும். பின்பு, அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் இடித்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு, இதில் இடித்த நாட்டுக்கோழி சேர்த்து வதக்கவும். இப்போது, இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு, உப்பு சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லி இலைகளை சேர்த்து குக்கரை மூடிப் போட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கினால் சுவையான இடித்த நாட்டுக்கோழி ரசம் தயார்.