பெர்ஃப்யூம் பயன்படுத்தினால் இந்த பிரச்சனை எல்லாம் வருமா.? அதிர்ச்சி தகவல்கள்.!
பெர்ஃப்யூம் பயன்படுத்தினால் இந்த பிரச்சனை எல்லாம் வருமா.? அதிர்ச்சி தகவல்கள்.!
முந்தைய காலங்களில் சந்தனம், ஜவ்வாது, அத்தர் போன்ற வாசனை பொருட்களை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது வாசனை திரவியங்கள் விதவிதமாக கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் போது, வியர்வை துர்நாற்றத்திலிருந்து நம்மை காப்பதுடன், நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது. ஆனால் இதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் உங்களுக்கு பலவிதமான நோய்கள் வரலாம் என்றால் நம்ப முடிகிறதா?
தற்போது நீங்கள் வாங்கும் சோப்பு, ஷாம்பு, டிடெர்ஜென்ட் என்ற அனைத்திலும் வாசனையை கொடுக்கும் ரசாயனங்கள் உள்ளன. அது சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. மூன்றில் ஒரு நபர் இவற்றை உபயோகிக்கும் பொழுது நோய்வாய்ப்படுகிறார் என்று கண்டறிந்துள்ளனர். ஆஸ்துமா, தலைவலி, ஒற்றைத் தலைவலி சுவாசப் பிரச்சினைகள், தலை சுற்றல், குமட்டல், தடிப்புகள் போன்றவற்றையும் ஏற்படுத்துகின்றன.
ஒரு சிலர் உடல் முழுவதும் இந்த பெர்ஃப்யூம்களை அடித்துக் கொள்வது உண்டு. கழுத்துப் பகுதியில் அடிக்கும் பொழுது எரிச்சல், ஒவ்வாமை, தோல் கருத்துப் போகுதல் என்று பல பிரச்சினைகள் ஏற்படலாம். காதுகளில் பின்புறம் அடிப்பதால், தோல் வறண்டு போகும் அபாயம் உள்ளது.
தரமற்ற வாசனை திரவியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வரும் நபருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெண்களுக்கு FSH மற்றும் LH ஹார்மோன்களுக்கு இடையிலான பேலன்ஸை சீர்குலைப்பதால், PCOS பாதிப்பு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.