மக்களே உஷார்.!! இளம் வயதிலேயே தாக்கும் சர்க்கரை நோய்..!!
மக்களே உஷார்.!! இளம் வயதிலேயே தாக்கும் சர்க்கரை நோய்..!!
20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலை போய், சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருக்கிறது. மேலும் தற்போது எல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை உள்ளது என்று கூறுகிறார்கள். இதில் டைப் 2 என்ற சர்க்கரை நோயானது பெரும்பாலும் இளம் வயதினருக்கு வருகிறது என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது தான். இதனால் சர்க்கரை நோய் வருவதை இளம் வயதிலேயே தடுப்பதற்கு துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும்.
கணினி மயமான இந்த உலகத்தில், அனைவரும் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலைபார்க்கிறோம். இதனால் வீட்டில் இருக்கும் சிறிது நேரத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என்றும் தவறாமல் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.