"ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சி மாறுபடுமா?!" என்ன சொல்கிறார் நிபுணர்!?
ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சி மாறுபடுமா?! என்ன சொல்கிறார் நிபுணர்!?
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த மாதங்களில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தையின் வளர்ச்சி நடவடிக்கையில் மாற்றம் தென்படுவது எதனால்? இரண்டு வயதான பெண் குழந்தை ஓரிரு வார்த்தைகள் பேசுவதும், நாம் சொல்வதை புரிந்துகொள்வதும் என்று இருக்கிறாள்.
ஆனால் ஆண் குழந்தையின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. இதற்கு சிகிச்சை தேவைப்படுமா? என்று வாசகர் கேட்ட கேள்விக்கு, கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.ஸ்ரீனிவாஸ் பதில் சொல்கிறார்.
பேச்சு மற்றும் வளர்ச்சி ஆகிய படிநிலைகள் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளுக்கு வேகமாக இருக்கும் என்பதற்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இரண்டு வயதுக் குழந்தைக்கு குறைந்தது 50 வார்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும்.
வாக்கியங்களை பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.அதற்கு குறைவாக பேசினால் பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளதாக அர்த்தம். மேலும் நன்றாக நடப்பது, படிகளில் ஏறி இறங்குவது, விளையாடுவது என்று தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடு என்று அர்த்தம்" என்று கூறியுள்ளார்.