பிராய்லர் கோழி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? .. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பிராய்லர் கோழி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? .. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் உணவு பழக்கம் அதிக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிக அளவில் விரும்புகின்றனர். எனவே அதற்கேற்றார் போல் அசைவ உணவுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அசைவ உணவுகளில் குறிப்பாக பிராய்லர் கோழிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பிராய்லர் கோழி இறைச்சிகள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான தீமைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் பலரும் இதனை பொருட்படுத்தாமல் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
அதன்படி பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் புரோஸ்டேட் என்ற புற்றுநோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.