இதையெல்லாம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் அவ்வளவு தான்.! உஷார்.!
இதையெல்லாம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் அவ்வளவு தான்.! உஷார்.!
எப்போதுமே பழ வகைகள் நம்முடைய உடலுக்கு சத்துக்களையும், ஆற்றலையும் வழங்கும் ஒரு உணவு பொருளாகயிருக்கிறது. ஆனால், ஒரு சில பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீரை பருகினால், பல உடல் நலதொந்தரவுகள் உண்டாகலாம். தற்போது அது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் குளுக்கோஸ், மாங்கனீசு போன்ற சத்துக்களிருக்கின்றன. வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன், அதேபோன்று தர்பூசணி பழத்தை சாப்பிட்டவுடன், தண்ணீர் பருகுவதால், செரிமான பிரச்சனை உண்டாகும் என்று கூறப்படுகிறது. மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு, உடனடியாக தண்ணீர் சாப்பிடுவதால், அதிலுள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பப்பாளி பழத்தில் பப்பய்ன் எனப்படும் என்சைம் இருக்கிறது. பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவவதால், வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அன்னாசி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் பழகுவதால், இதிலுள்ள புரோமலைன் என்கின்ற என்சைம் வயிறு குறித்த பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிட்டு உடனடியாக தண்ணீர் பருகுவதால் நெஞ்செரிச்சல் உண்டாகலாம். ஆப்பிளில் பெக்டின் என்ற பொருளிருப்பதால் உடனடியாக தண்ணீர் பருகுவதால், வயிற்றை மந்தமாக்கும் என்று கூறப்படுகிறது.