"வீட்டு சமையலறையில் இத்தனை மருந்து இருக்கா?! இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?!"
வீட்டு சமையலறையில் இத்தனை மருந்து இருக்கா?! இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?!
நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு என்னென்ன நன்மைகளை பெறலாம் என்று இங்கு பாப்போம். தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் பச்சைக் கொத்தமல்லி இலைகளை தினமும் காலையில் குடித்து வரலாம். படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.
வசம்பை சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். சாதம் வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
5துளசி இலைகள், சிறிது சுக்கு, 2 லவங்கம் சேர்த்து மைய அரைத்து நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்றுவலி நீங்கும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து தினமும் சோப்புக்கு பதில் பயன்படுத்தினால் சருமப் பிரச்சனைகள் தீரும்.