இரவு நேரத்தில் செல்போன் பார்க்கும் பழக்கம் உள்ளவரா.? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.!!
இரவு நேரத்தில் செல்போன் பார்க்கும் பழக்கம் உள்ளவரா.? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.!!
தூக்கம் என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு 6-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தூக்கம் என்பது உடல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் மனதின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பதால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தூக்கமின்மை மன அழுத்தம் மற்றும் டிப்ரஷன் ஒன்றரை பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் குறைந்த நேரம் உறங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.