எச்சரிக்கை.! ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் கண்டிப்பாக குடிக்கக்கூடாது... ஏன் தெரியுமா.!?
எச்சரிக்கை.! ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் கண்டிப்பாக குடிக்கக்கூடாது... ஏன் தெரியுமா.!?
ஆப்பிள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா
பொதுவாக தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆப்பிள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதை குறித்து தெரியுமா? இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஆப்பிளில் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மாங்கனிசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இவ்வாறு பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிளை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலை நேரத்தில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா.!?
பொதுவாக பழங்களில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் போன்றவை இருக்கும். எனவே ஆப்பிள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் போது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நிலைகுலைய செய்யும். இதனால் வயிற்றில் ஈஸ்ட் வளர தொடங்கி கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆல்கஹாலை உற்பத்தி செய்து வயிற்றில் வாயு பிரச்சனையை அதிகரிக்கும்.
ஆப்பிள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் செரிமான கோளாறு, உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பது, வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பல வகையான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். ஆப்பிள் மட்டுமல்லாது எந்த வகையான பழங்கள் சாப்பிட்டாலும் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலை மிட்டாய் அதிகமாக சாப்பிடுவீங்களா.? உங்களுக்கு தான் இந்த பதிவு.!?