வெயில் காலத்தில் டிராகன் பழத்தை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா.?!
வெயில் காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுங்க.! அப்புறம் பாருங்க.!
டிராகன் பழத்தின் சுவை சிலருக்கு பிடித்ததாகவும், பலருக்கு பிடிக்காததாகவும் இருக்கும். இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த பழம் சந்தைகளில் தான் அதிகம் இருக்கும். இந்தக் கனியில் பல அற்புத நன்மைகள் இருக்கின்றன. அதிலும் கோடை காலத்தில் டிராகன் பழத்தை சாப்பிடும் போது மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. டிராகன் பழம் உள்ளே வெள்ளை நிறத்திலும், வெளியே சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
கோடை காலத்தில் பொதுவாகவே பழ வகைகளை நிறைய எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் உடல் வெப்பம் அதிகரிக்க தண்ணீர் பற்றாக்குறை உடலில் ஏற்படும். அப்பொழுது நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க பழங்களை சாப்பிடுவது நல்லது. இதில் டிராகன் பழத்தைக் கோடையில் சாப்பிடுவதன் மூலம் எவ்வாறு நன்மை தருகிறது என்பதை பார்ப்போம்.
டிராகன் பழத்தை கோடையில் சாப்பிடும் போது பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இதை சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயைத் தடுக்க உதவுகிறது. எனவே கோடை காலத்தில் கண்டிப்பாக டிராகன் பழம் கிடைக்கும் போதெல்லாம் விலையை பார்க்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.