அனைவரும் விரும்பி சாப்பிடும் முருங்கை காய் மசால் வடை செய்வது எப்படி.?
அனைவரும் விரும்பி சாப்பிடும் முருங்கை காய் மசால் வடை செய்வது எப்படி.?
மாலை நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபியான முருங்கைக்காய் மசால் வடை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1-கப்
முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்கேற்ப
முதலில் ஒரு கப் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். முருங்கைக்காயை பொடி பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெந்த பிறகு முருங்கை காயின் சதை மற்றும் விதையை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் ஊற வைத்த கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு அதனுடன் சோம்பு, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதனுடன் வேக வைத்த முருங்கை காய் சதை, விதை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரெடி செய்த மாவை தட்டையாக தட்டி எடுத்தால் சுவையான முருங்கை காய் மசால் வடை தயார். ஈவினிங் சமயத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபி தயார்.