குட்டீஸ்க்கு பிடித்த முட்டை சமோசா.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!
குட்டீஸ்க்கு பிடித்த முட்டை சமோசா.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முட்டை சமோசா செய்வது எப்படி என்று இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
சீரகம் - 1/4 தேக்கரண்டி
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் கோதுமை மாவில் 2 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
★பின் சின்ன வெங்காயம் மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★அடுத்து சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்து பசை போல கலக்கி கொள்ளவும்.
★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து பொரித்து சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
★வெங்காயம் பாதி வதங்கியபின், கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகு பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி பின் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
★பின் மசாலா பச்சை வாசனை போனவுடன், முட்டை உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
★அடுத்து பிசைந்த சப்பாத்தி மாவை மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தீத்தி முக்கோண வடிவில் செய்து, நடுவில் செய்துவைத்த முட்டை மசாலாவை சேர்த்து கோதுமை மாவு பிசையினை வைத்து ஓரங்களை ஒட்டி விட வேண்டும்.
★இறுதியாக வானிலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக எடுத்தால் முட்டை சமோசா தயாராகிவிடும்.