முதல் முறையாக அம்மாவாகும் பெண்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.!
முதல் முறையாக அம்மாவாகும் பெண்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.!
முதன்முறையாக குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தையின் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கலாம். குழந்தை அழுதாலோ அல்லது குழந்தைக்கு ஏதாவது செய்யும்போதோ மிகவும் அச்சமாகத்தான் இருக்கும். அறுவை சிகிச்சையாக இருந்தாலும் சரி, சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான விஷயம்தான்.
தாய்மையின் துவக்கம் :
பல பெண்களும் கர்ப்ப காலம் முடிந்து குழந்தை பிறந்தவுடன் நமது பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவே கருதுவோம். ஆனால், தாய்மையின் பயணம் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. முதல் முறை தாயாகி உள்ள பெண்களுக்கு அவசியமான குழந்தை வளர்ப்பு பற்றி சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
முதல் தாய்ப்பாலின் அவசியம் :
குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் அதன் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் கூறுவார்கள். குழந்தை பிறந்த உடனே அதற்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று கூறப்படுகிறது. இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்கு கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இதை தவிர்க்காமல் கட்டாயம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்.. துடிதுடித்து இறங்க சோகம்.!
தாய்ப்பால் கொடுக்கும் நிலை (பொசிஷன்) சரியாக இருக்க வேண்டும். இதை மருத்துவர் அல்லது செவிலியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சரியான பொசிஷனில் அமர்ந்து தாய்ப்பால் கொடுத்தால் தான் சரியாக தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும், தாய்க்கும் இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
குழந்தையின் அழுகை :
எதற்காக குழந்தை அழுகிறது என்பது பலருக்கும் பல நேரங்களில் தெரியாது. ஆனால் அதை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு குழந்தையை அணுக வேண்டும். முக்கியமாக, டயப்பர் ஈரமாக இருந்தால், வயிற்று வலி இருந்தால், தூக்கம் வந்தால், பசி வந்தால்,
அதிக குளிர் அல்லது அதிக வெப்பமாக இருந்தால் குழந்தை பெரும்பாலும் அழும்.
தாயின் அருகாமை வேண்டி சில நேரம் அழும். அழுகை எதுவாக இருந்தாலும் குழந்தையை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு அதை தெரிந்து அதற்கான தீர்வை கொடுக்க வேண்டும்.
தடுப்பூசி:
குழந்தைக்கு எந்தெந்த மாதத்தில் தடுப்பூசி சரியாக போட வேண்டும் என்பதை தடுப்பூசி அட்டவணை கொண்டு தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் நினைவுப்படுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று தடுப்பூசியை சரியாக போட வேண்டும். உங்கள் மருத்துவரிடம் முன்னதாகவே சளி, காய்ச்சல், இருமல் மற்றும் தாய்ப்பால் குடிக்காத நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவசர கால தீர்வுகளை கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
குளிக்கவைத்தல்:
குழந்தை ஆரோக்கியமாக சரியான எடையுடன் பிறந்து இருந்தால், குழந்தை பிறந்த மறுநாளே கூட குளிப்பாட்டலாம். ஆனால், அம்மாவிற்கு குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குளிக்க வைக்க வேண்டும் என்பதை பெரியோர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து வைத்து கொள்ளவும். மசாஜ் செய்யும் முறை மற்றும் அதன் அவசியம் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
இதையும் படிங்க: கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை; சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!