தீப்பிடித்த கேஸ்., சிதறி ஓடிய கூட்டம்.. தனி ஆளாக அசம்பாவிதத்தை தவிர்த்த இளைஞர்.. குவியும் பாராட்டு.!
தீப்பிடித்த கேஸ்., சிதறி ஓடிய கூட்டம்.. தனி ஆளாக அசம்பாவிதத்தை தவிர்த்த இளைஞர்.. குவியும் பாராட்டு.!
ஒவ்வொரு வீட்டிலும் இன்றளவில் கேஸ் சிலிண்டரின் பயன்பாடு என்பது இருக்கிறது. இதனால் வீட்டில் சமைப்போரின் வேலைகள் இரட்டிப்பாக குறைந்து, விரைந்து அதனை செய்து முடிக்க முடிகிறது. வீடுகளை போல கடைகளில், வணிக ரீதியாக 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சிலிண்டர் வாயுவை அடைத்து வைத்து பயன்படுத்துவதால், அதனை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். சிலிண்டரின் இணைப்புகள், ரெகுலேட்டர் போன்றவை சரியாக உள்ளதா? என கவனித்து, அவை பழுதாகி இருந்தால் உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையேல், சிறிய அலட்சியிம் கூட சிலநேரம் பெரிய விபத்துகளாக மாறிவிடும்.
தீ விபத்தை தவிர்ப்பது எப்படி?
அதேபோல, சிலிண்டர் திடீரென வாயுக்கசிவு காரணமாக கொளுந்துவிட்டு வாயு வெளியேறி எரிய நேர்ந்தாலோ, அதனை அணைக்கும் செயலை துரிதமாக மேற்கொண்டால் விரைந்து பெரிய அசம்பாவிதத்தை தடுத்துவிடலாம். அதாவது, சிலிண்டர் கேபிள், ரெகுலேட்டர் வழியாக தீ வெளியேறினால், விரைந்து ஈரமான சாக்கு அல்லது துணி கொண்டு கேசின் மேல் பாகத்தை மறைத்தால் தீ கட்டுப்படும்.
இதையும் படிங்க: அந்த மனசுதான் சார் கடவுள்.. குழந்தைக்கு பால் வாங்கி வருவதற்குள் புறப்பட்ட இரயில்.. கார்ட் நெகிழ்ச்சி செயல்.!
ஒருசில நேரம் கேபிள் வழியாக தீ எரிந்தால், உடனடியாக ரெகுலேட்டரை ஆப் செய்தும் தீ விபத்தை துண்டிக்கலாம். கேசில் தீப்பிடித்த நிமிடங்கள் அல்லது நொடிகளில் இதனை செய்திட வேண்டும். தாமதப்படும் ஒவ்வொரு நொடியும், கியாஸ் வெடித்து சிதற வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உரிய பயிற்சி இல்லாமலும் அதனை செய்ய கூடாது.
கேஸ் சிலிண்டர் காரணமாக ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினரும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மக்கள் கூட்டம் நிறைந்த கடையில் கேஸ் தீப்பிடிக்க, மக்கள் ஓட்டம் பிடித்தனர். ஒருவர் மட்டும் சுதாரிப்புடன் அதனை நிறுத்தினார். மேற்கூறிய வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை எனினும், சாதுர்யமாக செயல்பட்ட இளைஞரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: "ஒற்றுமையே பலம்" - துப்பாக்கியுடன் நுழைந்த திருடனை விரட்டிப்பிடித்த மக்கள்..!