உங்க குழந்தை சாப்பிட அடம் பிடிக்குதா.?! கொய்யாவை வைத்து இப்படி செய்யுங்கள்.!
உங்க குழந்தை சாப்பிட அடம் பிடிக்குதா.?! கொய்யாவை வைத்து இப்படி செய்யுங்கள்.!
பலருக்கு கொய்யாப்பழம் மிகவும் பிடித்த உணவு என்றாலும் ஒரு சிலருக்கு இது பிடிக்காத உணவாக இருக்கும். மற்ற பழங்களை விட கொய்யாப்பழம் அதிகப்படியான சத்து கொண்டது. இதில் விட்டமின் ஏ, சி, பி6 மற்றும் கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்டவை இருக்கின்றன.
இப்படி பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த கொய்யாவை குழந்தைகளுக்கு அன்றாடம் கீழ்காணுமாறு ஜூஸ் செய்து கொடுப்பது அவர்களது ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும். சாப்பிட அடம் பிடிக்கின்ற குழந்தைகள் கூட இந்த ஜூஸை எளிதில் குடித்து விடுவார்கள். ஏனென்றால் இது அவ்வளவு சுவையாக இருக்கும்.
கொய்யா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் :
பால் - அரை கப்
கொய்யாப்பழம் - 2
பாதாம் - 3
நாட்டு சர்க்கரை - 2 கரண்டி
கொய்யா பழத்தை துண்டு துண்டாக வெட்டி எடுத்துக் கொண்டு, ஒரு மிக்ஸியில் அதை போட்டு நாட்டு சர்க்கரை மற்றும் பால் உள்ளவற்றை கலந்து நன்றாக அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ள வேண்டும்.
பின் பாதாமை அதில் நொறுக்கி போட்டு குடித்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.