குளிர் காலத்தில் அதிகமாக டீ குடிக்கிறீங்களா.!? உங்களுக்குதான் இந்த அதிர்ச்சி செய்தி.!
குளிர் காலத்தில் அதிகமாக டீ குடிக்கிறீங்களா.!? உங்களுக்குதான் இந்த அதிர்ச்சி செய்தி.!
பொதுவாக குளிர் காலத்தில் பலரும் சூடாக டீ காபி குடிப்பதை விரும்புகின்றனர். குளிர்காலத்தில் உடலுக்கு சூடாக டீ, காபி குடிப்பது நன்மையை தரும் என்றாலும் இதை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக டீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
நரம்பு மண்டல பாதிப்பு: அதிகமாக டீ குடிப்பது உடலில் உள்ள திசுக்களை பாதிக்கும். குறிப்பாக இதய நோய் மற்றும் இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்ட பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்ரிக்காட் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!?
இரும்பு சத்து குறைபாடு: டீயில் உள்ள டானின் போன்ற இரசாயனங்கள், உடலில் கலக்கும் போது நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்து உரிஞ்சுதலை தடுக்கும் என்பதால், அதிகமாக டீ குடிக்க கூடாது.
மன அழுத்தம் : அதிகமாக டீ குடிக்கும் போது உடலில் உள்ள ஆற்றலை குறைத்து மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும்.
பித்தம் - அதிகமாக டீ குடிப்பதால் உடலில் பித்தம் அதிகரிக்கும். இதனால் செரிமான பிரச்சனை, வயிற்று கோளாறுகள் ஏற்படக்கூடும்.
நரம்பு தளர்வு: குளிர்காலத்தில் அதிகமாக டீ குடிப்பதால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி நரம்பு தளர்ச்சி, கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.
பற்களின் ஆரோக்கியம் : டீயில் உள்ள வேதிப்பொருட்கள் பற்கள், ஈறுகளை பாதிக்கிறது. மேலும் பற்கள் நிறம் மாறுதல், ஈறுகளில் வீக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் - நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் டீ அல்லது காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வருகின்றனர். ஆனால் இதுவும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே குளிர் காலத்தில் டீ அல்லது காபி குடிப்பதை குறைந்த அளவு கட்டுப்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லது.
இதையும் படிங்க: Tips :நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்.!?