அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டால் நிகழும் அற்புதம்?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டால் நிகழும் அற்புதம்?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பொதுவாக அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எனவே அத்திப்பழத்தை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அத்திப்பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். குறிப்பாக ஆண்கள் தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அத்திப்பழத்தில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. எனவே ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிட்டால் அன்றாடம் தேவைப்படும் இரும்பு சக்தியின் அளவை பூர்த்தி செய்கிறது. மேலும் அத்தி பழம் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது.
அதேபோல் தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுகளின் எண்ணிக்கை மேலும் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
தினமும் உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமத்தை அழகாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. பாலில் அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிட்ட பிறகு அந்த பாலை குடித்தால் உடல் வலுவடையும். குறிப்பாக நரம்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.