உணவில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது கொடிய விஷத்தை சேர்ப்பதற்கு சமம்! பேராசிரியை பேச்சால் எழுந்த சர்ச்சை.
Health benefits of coconut oil
பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஓன்று தேங்காய் எண்ணெய். மிகவும் மருத்துவகுணம் வாய்ந்த தேங்காய் எண்ணெயை சுத்தமான விஷம் என்று ஜேர்மனியில் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் கூறிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியை கரின் மிஷெல்ஸ் பேசுகையில் தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் தேங்காய் எண்ணெயை அழகு சார்ந்த பொருட்களில் உபயோகிப்பது குறித்து நான் பேசவில்லை. ஆனால் அதை உணவு பொருட்களில் சேர்ப்பது பற்றித்தான் நான் பேசுகிறேன் என்றார்.
பன்றியின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணையை வீட்டா தேங்காய் எண்ணெயில் ஆபத்துகள் மிவையும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே நான் உங்களை எச்சரிக்கிறேன், நீங்கள் உண்ணும் உணவில் தேங்காய் எண்ணையில் செய்த உணவு மிகவும் கொட்டியது, எனவே அதை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று அவர் கூறினார்.
இவர் கூறிய இந்த கருத்தால் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது, மேலும் இவரது கருத்துக்கு பலரும் எதிரிபு தெரிவித்து வருகின்றனர்.