கருப்பு கொண்டைக்கடலையில் கொட்டி கிடக்கும் மருத்துவ நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
கருப்பு கொண்டைக்கடலையில் கொட்டி கிடக்கும் மருத்துவ நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
கருப்பு கொண்டைக்கடலை உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது. இதில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் உடல் எடையை குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
எனவே இரவு கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைக்கும் முன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கலாம். வேண்டுமானால் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் உடல் எடை குறையும்.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள இரும்பு சத்து இரத்த சோகை பிரச்சினைகளை போகிறது. மேலும் இதன் மூலம் இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
அதேபோல் கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. குறிப்பாக கருப்பு கொண்டைக்கடலையில் புரோட்டீன் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது.