லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
பொதுவாக லெமன் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. ஆனால் இதனை டீ போட்டு குடித்தால் உடல் எடையை குறைப்பது முதல் பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது.
அந்த வகையில் லெமன் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக மூட்டு வலி பிரச்சனைகளுக்கு லெமன் டீ பயன்படுகிறது.
எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு லெமன் டீ நல்ல நிவாரணமாக பயன்படுகிறது. மேலும் வைட்டமின் சி நிறைந்த லெமன் டீ குடிப்பதால் வலி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை செயல்பட வைக்கிறது.
குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் லெமன் டீ குடிப்பது நல்ல பலன் அளிக்கிறது. அதன்படி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதேபோல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், கல்லீரல் செயல்பாட்டை தூண்டவும் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் முக்கிய பங்கு வைக்கிறது.