உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க?
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க?
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயில் தேவையற்ற கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றி உடலுக்கு தேவையான பல்வேறு விதமான சத்துக்களை கொடுப்பதாக நம்முடைய முன்னோர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது.
எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸாக குடிப்பதால் நல்ல பலன் அளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் நெல்லிக்காய் உணவு வகைகளிலும் நல்ல சுவையை கொடுக்கிறது. இதனை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.
நெல்லிக்காயில் நார் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை எப்படி வேண்டுமோ அப்படி செய்து சாப்பிடலாம்.