ஏன் மஞ்சள் கயிற்றில் மட்டும் தாலி கட்டுகிறார்கள் தெரியுமா? அதன்பின்னால் உள்ள ரகசியம்!
Health benefits of turmeric in tamil
இந்து சமூகத்தை பொறுத்தவரை திருமணம் என்றாலே மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதுதான் வழக்கம். நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான உண்மை இருக்கும். அதுபோன்ற அறிவியல் உண்மையை கொண்டதுதான் இந்த மஞ்சள் நிற தாலி.
மஞ்சள் தாலி அணிந்து பெண்கள் குளிக்கும்போது அதில் மஞ்சளை பூசி குளிப்பது வழக்கம். மஞ்சள் ஒரு மிகசிறந்த கிருமி நாசினி. மஞ்சள் நீரில் கரைந்து நமது உடலில் பரவும்போது நமது உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்து தூய்மையுடன் இருக்க உதவுகிறது.
மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகத்தான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுகின்றனர்.