என்ன வேலையா இருந்தாலும் அதைமட்டும் அடக்காதிங்க! பின்விளைவுகள் ஏராளம்!
Health problems of holding urine for longer
பொதுவாகவே ஆத்திரத்தை கூட அடக்கி விடலாம் ஆனால் சிறுநீரை அடக்கி வைக்க முடியாது என்று பழமொழிகூட சொல்வார்கள். பொதுவாக வேண்டுமென்றே யாரும் சிறுநீரை அடக்கி வைப்பதில்லை. வேலைப்பளு, பயணம் மேற்கொள்ளும் சமயம், வகுப்பறை நேரங்கள் இது போன்ற சமயத்தில் ஒரு சிலர் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
இவாறு சிறுநீரை அடக்கி வைப்பது சரியா? இதனால் ஏதாவது விளைவுகள் வருமா? வாங்க பாக்கலாம்.
நீங்கள் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிவைக்கும்போது ஒருவிதமான வலி உங்கள் அடிவயிற்று பகுதியில் ஏற்படும். இதனால் நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். மேலும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிவைத்தல் நீங்க செய்துகொண்டிருக்கும் வேளையில் கவனம் சிதறும்.
மேலும் சிறுநீரை அதிகநேரம் அடக்கிவைத்தால் அதிக அளவில் சிறுநீர் தோற்று ஏற்பட்ட வாய்ப்புள்ளது. இது உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிக நேரம் சிறுநீரை அடக்கிவைக்கும் பழக்கம் அதிகம் இருந்தால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இனியாவது சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனே கழித்துவிடுவது மிகவும் நல்லது. இதனை அனைவர்க்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.